வணக்கம்

Friday, August 18, 2017

மாணவிகளை அடிக்க அனுமதி கடிதம் கேட்ட தருமபுரி பள்ளி ஆசிரியை பெற்றோர்கள் அதிர்ச்சி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இதில் 11-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர் நேற்று அனைத்து மாணவிகளிடமும் தங்களின் பெற்றோர்களிடம் ஒரு அனுமதி கடிதம் வாங்கி வர கூறி உள்ளார்.அந்த கடிதத்தில், 11-ம் வகுப்பு படிக்கும் எனது மகள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க அவளை ஆசிரியை அடிக்கவும், திட்டவும் பெற்றோர்களாகிய எங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை, என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் பெற்றோரின் கையெழுத்தை வாங்கி வர வேண்டும், என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாகனம்பட்டியை சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்றனர். அங்கு தலைமை ஆசிரியை சசிகலா தேவியை சந்தித்து இதுகுறித்து விளக்கம் கேட்டனர். இதையடுத்து சசிகலா தேவி, சம்பந்தப்பட்ட ஆசிரியையை அழைத்து விசாரித்தார். அப்போது அவரும் மாணவிகள் சரிவர படிக்காததால் அவர்களை அடித்து படிக்க வைக்க வேண்டி உள்ளது. 

அதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை சரிசெய்யவே கடிதம் வாங்கி வரச் சொன்னதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் இனி அவ்வாறு நடந்து கொள்ளமாட்டேன் என்று ஆசிரியை உறுதி அளித்தார். இதையடுத்து சசிகலா தேவி அந்த ஆசிரியையை எச்சரித்தார். இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது, என்று கூறி அனுப்பினார்.பள்ளியில் இருந்து இவ்வாறு கடிதம் வாங்கி வர கூறிய சம்பவம் அந்த பகுதியில் பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...