பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி ஊழியர் சங்கத்தினர் மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 22-ம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். நாடு தழுவிய அளவில் வங்கிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால், வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி