வணக்கம்

Friday, August 18, 2017

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: பாலச்சந்திரன் தகவல்

தமிழகத்தில் இன்று மழை நீடிக்கும் என்றும், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், மழை நிலவரம் குறித்த தகவல்களை அளிக்க செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வட தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை தொடரும். 

இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது என்று கூறியுள்ளார். குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது. பதிவான மழையின் அடிப்படையில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். 

மேலும் சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு மாலை அல்லது இரவில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், இப்போது இருப்பதை விட வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழையின் அளவானது படிப்படியாகக் குறையும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...