வணக்கம்

Thursday, August 10, 2017

இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்


இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
6 கல்லூரிகள்: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, அரசு யோகா -இயற்கை மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேதா கல்லூரி ஆகிய ஆறு அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி தொடங்கியது.
விநியோகம் தொடங்கிய முதல்நாளே 1,100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. வார நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணப்பங்களை நேரில் பெறுவதற்கும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கும் ஆகஸ்ட் 30 கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 -ஆம் தேதி கடைசியாகும்.

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...