'பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், தேர்வுக்கான மதிப்பெண்கள், பாட வாரியாக தலா, 200 என்பது, 100 ஆக மாற்றப்பட்டு உள்ளது.
அது போல, பிளஸ் 2 தேர்வுக்கு மாற்றம் உண்டா என, மாணவ மாணவியரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்விலும், வினாத்தாள் மதிப்பெண் முறையிலும், மாற்றம் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: பழைய முறைப்படியே, இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 'புளூ பிரின்ட்' அடிப்படையில், கேள்விகள் அமையும். சிந்திக்கும் வகையிலும், சிக்கலுக்கு தீர்வு காணும் வகையிலும், பதில் எழுத, சில வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்கான மதிப்பெண்ணில், இந்த ஆண்டு மாற்றம் இல்லை.
எனவே, மாணவர்கள் குழப்பமின்றி, பழைய தேர்வு முறையின்படி பயிற்சி பெறலாம். தமிழக பெற்றோர் - ஆசிரியர் கழகம் வெளியிட்ட, வினா வங்கிகளை பயன்படுத்தியும் பயிற்சி எடுக்கலாம். 'நீட்' போன்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்களை, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி