வணக்கம்

Tuesday, August 22, 2017

12லட்சம் அரசு ஊழியர் இன்று ஸ்டிரைக் : பள்ளிகள் செயல்படாது

ஜாக்டோ-ஜியோ அறிவித்தபடி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  நடக்கிறது. 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் இந்த அடையாள  வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை  தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக ஜாக்டோ-ஜியோ இணைந்து  இன்று  (22ம் தேதி) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் அறிவித்தது.  அதன்படி இன்று அடையாள வேலை நிறுத்தம் நடக்கிறது. இது குறித்து  ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமைச் செயலக  ஊழியர் சங்கத்தின்  தலைவருமான கணேசன், அதன் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று சென்னையில்  அளித்த பேட்டி: 

ஜாக்டோ-ஜியோ ஏற்கெனவே அறிவித்தபடியும்,  திட்டமிட்டபடியும் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம் நடக்கும். கடந்த 7  ஆண்டுகளாக நாங்கள் கேட்டு வரும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. 3  முக்கிய கோரிக்கைகளை தற்போது நிறைவேற்ற கேட்கிறோம். ஆனால், அரசு அது  குறித்து ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.  எனவே ஜாக்டோ-ஜியோ இணைந்து இன்று ஒட்டுமொத்தமாக 12 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவார்கள். இதில் 80 சங்கங்கள் இணைந்து போராடும். வேலை நிறுத்தம்  செய்தால் சம்பளம் இல்லை என்று அரசு தரப்பில் முதலில் கூறப்பட்டது. பின்னர்  பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டுகிறார்கள். இதற்கு நாங்கள்  அஞ்சப் போவதில்லை. எனவே விரைவில் ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சு  வார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும். இல்லை என்றால் திட்டமிட்டபடி வரும்  செப்டம்பர் 7ம் தேதி தொடர் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...