வணக்கம்

Tuesday, August 22, 2017

குரூப் - 1' தேர்வில் முறைகேடு? விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

 'குரூப் - 1' தேர்வில், முறைகேடு நடந்து உள்ளதாக தரப்பட்ட புகார்களை விசாரிக்கும் படி, மாநகர போலீஸ் ஆணையருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த, திருநங்கையான சுவப்னா தாக்கல் செய்த மனு: அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 1' பிரிவில், 68 பணியிடங்களுக்கான பிரதான தேர்வு, 2016 ஜூலையில் நடந்தது. அதில், முறைகேடு நடந்திருப்பதாக, தனியார், 'டிவி' செய்தி வெளியிட்டது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், விடைத்தாளை கேட்ட போது, வழங்க மறுத்து விட்டனர். தரகர்களிடம், விடைத்தாள்கள் எளிதாக கிடைக்கின்றன. அசல் விடைத்தாள் தங்களிடம் இருப்பதாக, தனியார், 'டிவி'யும் அறிவித்தது. எனவே, 'குரூப் - 1' தேர்வை ரத்து செய்து, புதிதாக நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் புருஷோத்தமன், தனியார், 'டிவி' சார்பில், வழக்கறிஞர் பி.டி.பெருமாள், டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், மணிசங்கர் ஆஜராகினர்.

தேர்வில், முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து, விசாரணை நடத்தி, விரிவான அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர போலீஸ் ஆணையருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, செப்., 11க்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...