தமிழக அரசின் நீட் அவசரச் சட்டம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டிற்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்ட வரைவுக்கு 2 மத்திய அமைச்சகங்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டன.
சுகாதாரத் துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இன்று ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நீட் மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ-யில் படித்த மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. சிபிஎஸ்சி மாணவர்களின் சார்பாக மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி வாதாடினார்.
வாதங்களைக் கேட்ட சுப்ரீம் கோர்ட் , ’மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏன்’ என்று தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பி உள்ளது. மேலும் தமிழக அரசின் நீட் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இன்று பிற்பகல் 2 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி