வணக்கம்

Thursday, August 17, 2017

முறையாக பதிவு செய்யப்படாத 81 லட்சம் ஆதார் அட்டைகள் அதிரடியாக ரத்து. உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில் உள்ளதா என அறிவது எப்படி !


முறையாக பதிவு செய்யப்படாத 81 லட்சம் ஆதார் அட்டைகள் அதிரடியாக ரத்து!


81 லட்சம் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.பி.சவுத்ரி இத்தகவலை தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 81 லட்சம் ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆதார் ஒழுங்கு விதி 2016, (27) பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் (28) படி, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள், முரண்பாடான கைரேகை பதிவுகள் கொண்ட ஆதார் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஆதாருக்கு பதிவு செய்த 5 வயதிற்கு உள்ளான சிறார்களுக்கு, 5 வயதிற்கு பிறகு பயோமெட்ரிக் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், பின்னர் மீண்டும் 15 வயதிற்கு பிறகு பயோமெட்ரிக் முறையில் கண்விழி, கைரேகை உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்திற்குள் புதுப்பிக்கப்படாவிட்டால் ஆதார் அட்டைகள் முடக்கப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில் உள்ளதா என அறிவது எப்படி?



UIDAI website-ன் முகப்பு பக்கத்தில் Aadhaar Services எனும் Tab-இன் கீழ் Verify Aadhaar Number-இல் உங்கள் ஆதார் எண்ணை போட்டு செயல்பாட்டில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம். 
UIDAI முகப்பு பக்கத்திற்கு செல்வதற்கான இணைப்பு ➤  UIDAI - Official Website

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...