தவளை ஒன்று தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள மிக ஆவலாக இருந்தது. புதிய உலகத்தைக் கண்டறியும் பொருட்டு சுற்றிக்கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக பால்குடத்தில் விழுந்துவிட்டது. குதித்து வெளியேற முற்பட்டது. பாத்திரம் உயரமாக இருந்ததால் முடியவில்லை. பாத்திரத்தின் அடிமட்டத்திற்காவது செல்லலாம் என்று நினைத்தபோது ஆழம் மிக அதிகமாக இருந்தது.
பால் அதன் பார்வையை மறைக்க, உயிர் பிழைப்பதற்கு எந்தவிதமான நம்பிக்கையும் அற்ற நிலையில் தன் வாழ்க்கை இதோடு முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டது தவளை. ஆனாலும் மேலே வரும் முயற்சியை கைவிடுவதாக இல்லை. உதைத்தது; குதித்தது; எம்பியது; இனி பாலைச் சார்ந்துதான் தன் வாழ்க்கை இருப்பதாக நினைத்துப் போராடியது.
கால்கள் வலித்தன. ஆனாலும் விடாமல் உதைத்துக் கொண்டும், குதித்துக் கொண்டும், எம்பிக் கொண்டும் இருந்தது. உதைத்துக் கொண்டே இருந்ததால் பால் திரிந்து வெண்ணெய் பந்தாக ஆனது. அதிலிருந்து எம்பிக் குதித்து வெளியே வந்தது.
தவளையைப் போல சில இடர்பாடுகளில் நாம் சிக்கிக் கொள்ளும்போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் எதிர்கால வாழ்க்கை அமையும். வாழ்க்கையில் ஏதோ ஓர் உணர்வுப் பூர்வமான அழுத்தத்துக்கு நாம் ஆட்பட்டிருக்கும்போது உதைத்துக்கொண்டே இருக்கவும், போராடிக் கொண்டே இருக்கவும் வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளில் நாம் என்ன செய்கிறோமோ அதன் விளைவே அடுத்த நிகழ்வாக அமையும். அது நமக்கு உயிர் வாழ்தலை மீட்டுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையையே மாற்றக் கூடியதாகவும் இருக்கும்
No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி