புது தில்லி: இந்தியாவின் 70வது சுதந்தர தினத்தை நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. நாடு முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் புது தில்லியில், தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலை அச்சடித்திருக்கும் தில்லி காவல்துறையினர் சிறப்புப் பிரிவு அதனை மக்களுக்கு வழங்கி வருகிறது.
மிக மோசமான பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
மும்பையின் முக்கிய இடங்களில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வாகன தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படுகின்றன.
கோவையில், பழங்களைக் கொண்டு சுதந்தர போராட்ட வீரர்களின் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தர்பூசணி மற்றும் கத்திரிக்காய் கொண்டு இந்திய வரைபடம் மூவர்ண நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை தில்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியாவின் 70வது சுதந்தர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
தமிழகத் தலைநகர் சென்னை மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்தர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்துள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
No comments:
Post a Comment
விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி