வணக்கம்

Wednesday, August 2, 2017

NEET தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா? அவசர சட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலனை

NEET தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா? அவசர சட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலனை

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு 2 ஆண்டுகள் விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் அவசர சட்ட நகல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது.
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.  நீட் தேர்வில் மத்திய பாடத் திட்டத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதால் மாநில கல்வி திட்டத்தில் பயின்றவர்களுக்கு மருத்துவக் கல்வி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை.

இந்நிலையில் நீட் தேர்விலிருந்து 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கக் கோரும் அவசர சட்ட நகல் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நேற்றிரவு வழங்கப்பட்டது. மனிதவளம் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் கருத்து கேட்ட பிறகு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த 2 முறை தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை மனிதவளம் மேம்பாட்டு துறையும், சுகாதாரத்துறையும் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...