வணக்கம்

Monday, August 21, 2017

அரசு ஊழியர்கள் நாளை 'ஸ்டிரைக்' அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்!!!



அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், நாளை வேலைநிறுத்த
போராட்டத்தில் ஈடுபடுகின்ற னர். அதனால், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ'வும், ஆசிரியர் சங்கங்களின் கூட்ட மைப்பான, 'ஜாக்டோ'வும் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பாக, போராட்டத்தில் குதித்துள்ளன.

நாளை, மாநிலம் தழுவிய வேலைநிறுத்த
போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்க பட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பளத்தை உயர்த்துதல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்து தல் போன்றகோரிக்கைகளுக்காக, போராட்டம் நடக்கிறது.

மற்றும் அரசு ஊழியர்கள், 10 லட்சம் பேர் வரை, போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அதனால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாமலும், அரசு அலுவலகங் களில், நிர்வாக பணிகளும் முடங்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், 'வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், ஒழுங்கு நடவடிக்கை பாயும். தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம்செய்யப்படுவர்' என, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.இது குறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர், மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அஞ்ச
மாட்டார்கள்.'எஸ்மா, டெஸ்மா' போன்ற சட்ட நடவடிக்கைகளையே, ஜாக்டோ - ஜியோ சங்கங்கள் எதிர் கொண்டு போராடின. மத்திய அரசின், 'மிசா' காலத்தையும், எதிர்கொண்டவர் கள் ஆசிரியர்கள்.எனவே, திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடக்கும். சங்க பிரதிநிதிகளை அழைத்து, அரசு பேச்சு நடத்தா விட்டால், செப்., 7 முதல் தொடர் வேலை நிறுத்தம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார். -

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...