வணக்கம்

Sunday, August 13, 2017

தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தயார்: நிர்மலா சீதாராமன்


Nirmala2
தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தாம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: - அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ஓராண்டுக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்தியரசு ஒத்துழைக்கு அளிக்க தயார். ஆனால் நிரந்தர விலக்கு என்பது சாத்தியம் இல்லை.
நீட் தேர்வில், தமிழக பாடதிட்டத்தில் 85 சதவீத உள் ஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மருத்துவ படிப்பில் சேர மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் மத்தியரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க ஒத்துழைப்பு தரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...